வீடுகளில் வளர்க்கப்படும் கோல்டன் பிஷ் மீன் ஆல்கஹாலை உற்பத்தி செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் மீன் வகைகளில் கோல்டன் பிஷ் மீன் வகை எல்லோராக்கும் பிடித்தமானது. அத்தகைய மீன்கள் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் லிவர்பூல் தலைமையிலான ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர்.

தங்கமீன்கள் குளிர்காலங்களில் உறைந்த ஏரிகளுக்கு கீழே இருக்கும்போது அந்த சூழலை எதிர்கொள்ள ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன. இவை தம்மில் உற்பத்தி செய்யப்படும் இலத்திரிக் அமிலத்தினை பயன்படுத்தியே எத்தனால் வகை ஆல்கஹாலை உற்பத்தி செய்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.