அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் கமலஹாசன் பேட்டிக்கு மக்களை கேவலமாக பேசியதாக தினகரன் பதில் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை வாய் திறக்காததவர்கள். படம் வெளியே வர ஜெயலலிதாவை சார்ந்து இருந்தவர்கள் இப்போது ஏதோ பேசுகின்றனர். அதிமுக இது போன்ற விசயங்களுக்கு பதில் அளிப்பதை விட முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மக்கள் திட்டங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அரசியலுக்கு வருவது என்பது நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்க முடியாது. அதிமுக மாபெரும் இயக்கம். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடந்துக் கொண்டு இருக்கிறது. யார் வந்தாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் அதிமுக பரிமாண வளர்ச்சி பெற்று அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.