க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை புகழ்பெற்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கருத்தரித்தல் சிகிச்சை, மகளிர் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெய் மேத்தாவுடன் கைகோர்பு

சென்னை, ஜூலை 9– 2023:சென்னையில் விரிவான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை புகழ்பெற்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கருத்தரித்தல் சிகிச்சை, மகளிர் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மகளிருக்கான மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளை கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை வழங்க உள்ளது.

மும்பை ஸ்ரீ ஐவிஎப் கிளினிக்கின் அறிவியல் இயக்குனர் டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கருவுறுதல் தொடர்பான முல்லேரியன் பிரச்சினைகளுக்கான சிகிச்சை மையத்தை இன்று திறந்தது. இந்நிகழ்ச்சியில் கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் மற்றும் இம்மருத்துவமனையின் மகப்பேறியல், பெண்ணோயியல் மற்றும் கருவுறுதல் மருத்துவப் பிரிவு தலைவர் பத்மப்ரியா விவேக் மற்றும் டாக்டர் ஜெய் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மையம் அசாதாரணமான அல்லது கருப்பை இல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கும். இந்த மையத்தில் டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து டாக்டர் பத்மப்ரியா விவேக் மகளிர் மருத்துவம், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் ஆகிய சிகிச்சைகளை வழங்க இருக்கிறார்கள். மேலும் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும், பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை அளிப்பதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும். மேலும் இங்கு இரண்டு உடல் பாகங்களுக்கு இடையே ஏற்படும் அசாதாரண இணைப்பான பிஸ்துலா பிரச்சினை, கருப்பை நீக்கம், மயோமெக்டோமி, செயலிழந்த கருப்பை ரத்தப்போக்கு, நார்த்திசுக்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், மலட்டுத்தன்மை, இன்-விட்ரோ கருத்தரித்தல் மூலம் குழந்தைபேறு இல்லாதவர்கள், முல்லேரியன் பிரச்சினைகள் என மகளிருக்கான சிறப்பான மருத்துவ சேவைகளையும் அளிக்கும்.

கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் பத்மப்ரியா விவேக் அவரது துறையில் சிறந்த அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்தவர் ஆவார்.

புகழ்பெற்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், ஐவிஎப் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெய் மேத்தாவுடன் டாக்டர் பத்மப்ரியா விவேக் இணைந்து, இப்பகுதியில் மகளிர் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த இருக்கிறார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு விரிவான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி அவர்களின் பல்வேறு நோய்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க இருக்கிறார்கள்.

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் டாக்டர் பத்மப்ரியா விவேக்கின் அனுபவம், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் ஆகியவற்றில் டாக்டர் ஜெய் மேத்தாவின் சிறந்த நிபுணத்துவம் ஆகிய இரண்டும் இணைவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் கிடைக்கும். இரண்டு நிபுணத்துவமிக்கவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும்போது நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு விரிவான மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இது குறித்து கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில், முல்லேரியன் பிரச்சினைகளுக்கான சிறப்பு மையம் உட்பட மேம்பட்ட மகளிர் மருத்துவ சேவைகளை சென்னையில் அறிமுகப்படுத்துவது என்பது இப்பகுதியில் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மையத்தில் நோய் கண்டறியும் அதிநவீன கருவிகள், நவீன அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. டாக்டர் பத்மப்ரியா விவேக் மற்றும் டாக்டர் ஜெய் மேத்தா ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடானது, தமிழ்நாட்டின் மகளிர் மருத்துவப் பராமரிப்பின் தரத்தை உயர்த்துவதோடு, சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனையாக எங்கள் மருத்துவமனையை முன்னிலைப்படுத்தும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டணி குறித்து டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறுகையில், சென்னையில் முல்லேரியன் நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை உட்பட மேம்பட்ட மகளிர் மருத்துவ சேவைகளை வழங்க டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.

டாக்டர் ஜெய் மேத்தா கூறுகையில், டாக்டர் பத்மப்ரியா விவேக் உடன் இணைந்து பணியாற்றுவது என்பது, எங்கள் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, விரிவான மகளிர் மருத்துவ திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. எங்கள் கூட்டு முயற்சி மூலம் முல்லேரியன் பிரச்சினைக்கான சிகிச்சை உட்பட மகளிருக்கான பல்வேறு நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவோம் என்று தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் முன்னணி மருத்துவமனையாக கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை விளங்கி வருகிறது. இம்மருத்துவமனையின் அதிநவீன மருத்துவ வசதிகளுடன், டாக்டர் பத்மப்ரியா விவேக் மற்றும் டாக்டர் ஜெய் மேத்தா ஆகியோரின் நிபுணத்துவமும் இணைந்து, சிறப்பான சுகாதார சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியாவில் முன் முயற்சியாக இங்கு திறக்கப்பட்டுள்ள இந்த மையம், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மகளிருக்கும் மேம்பட்ட தரமான மருத்துவ சேவைகளை வழங்கும்.