ஆதம்பாக்கத்தில் த.மா.கா. இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் இளைஞரணி தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கலந்துக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு பணிக்காக ஒதுக்கிய ரூ. 25 கோடி போதாது. பிரதமர் நேரிடையாக பார்த்து உண்மை நிலையை கண்டு உரிய தொகையை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கம் பணியில் ஈடுப்பட்டு உள்ளோம். கன்னியாகுமரியில் காணாமல் மீனவர்கள் தேடும் பணியை மத்திய-மானில தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.கே.நகரில் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.
தேர்தல் ஆணையம் நம்பிக்கை தரும் வகையில் தவ்று செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க கூடாது என்ற நிலையை எடுக்க வேண்டும். குஜ்ராத்தில் நடந்த தேர்தலில் அந்த மாநில வளர்ச்சியை பொறுத்தே மக்கள் வாக்களித்து உள்ளனர். ஆளும் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட இந்த முறை குறைவான எம்.எல்.ஏக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது ஆளுங்கட்சிக்கு எச்சரிக்கை மணியாகும். தேர்தலுக்கு தேர்தலுக்கு கூட்டணிகள் நிலை மாறும். த.மா.கா. கூட்டணி யாருடன் என்பதை தேர்தல் வரும் மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் அறிவிப்போம். தமிழகத்தில் வடமானில கொள்ளையர்கள் அதிகமாக உள்ளனர். இதை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழங்கில் ஒட்டை இருந்ததால் அதை அடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையத்தில் யார் கருத்து கூறினாலும் அதை உறுதி செய்து அறிக்கை தருவார். அந்த அறிக்கை தள்ளி போகக்கூடாது.
சென்னை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிச்சலை போக்க வேண்டும். கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். மீனம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரையும் பரங்கிமலையில் இருந்து சிறுச்சேரி வரை மெட்ரோ ரெயில் சேவையை மத்திய-மானில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். மழைக்காலத்திற்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், முனைவர் பாஷா, கொட்டிவாக்கம் முருகன், விவேகானந்தன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.