சென்னை 28 நவம்பர் 24 ப்ளேஸி டெக் ஜேஸ் ( Placessy Tech Zooze ) நிறுவனத்தின் இயக்குனர், பொது மேலாளருக்கு தெரியாமல் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மாணவரிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி HR-ல் பணிபுரிந்த பெண் பல லட்ச ரூபாய்களை பெற்று மோசடி செய்துள்ளார்.
சோசியல் ஜஸ்டிஸ்பார் இன்டர்நேஷனல் ஆன்டிக்ரைம் அசோசியேசன் மற்றும் சிவில் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சிலர் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ஷாம் பிரவீன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தனியார் வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் நிறுவனமான ப்ளேஸி டெக் ஜேஸ் என்ற நிறுவனம் தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தந்து நற்பெயருடன் விளங்கி வந்தது . இந்நிறுவனத்தில் திவ்யா ( எ )
பாண்டிச்செல்வி மனிதவள (HR) எக்ஸிக்யூட்டியாக பணியில் சேர்ந்தார் .
அவர் பணியில் அமர்ந்த குறுகிய காலத்திலே நிறுவனத்தின் இயக்குனர், பொது மேலாளருக்கு தெரியாமல் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மாணவரிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய்களை பெற்று மோசடி செய்துள்ளார்.
இந்நிறுவனத்தில் இந்த மோசடியை கண்டுபிடித்த பிறகு அவர் வேலையை விட்டு தலை மறைவாகிவிட்டார் .
இதுகுறித்து கிண்டி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். இப்புகார் மீது 35 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஆகவே தற்போது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் மோசடி பேர்வழி திவ்யா (எ) பாண்டிச்செல்வி மீது புகார் அளித்துள்ளோம் .
துணை ஆணையரும் இப்புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் .
பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பாண்டிச்செல்வியை தொடர்பு கொண்ட போது நான் தமிழக துணை முதல்வரின் உறவினர் என்றும் என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்று கூறி கொலை மிரட்டலும் விடுக்கிறார். இவர் உண்மையாகவே துணை முதல்வரின் உறவினர்தானா ? இந்த மோசடி விஷயம் அவருக்குத் தெரியுமா ? துணை முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கம் இவரின் உண்மை நிலையை காவல்துறை அதிகாரிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் .
பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊடகத்தின் முன்பு நிறுத்தாதற்கு காரணம்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊடகத்திற்கு முன்பு அவர்களை நிறுத்தவில்லை மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டியும் மோசடி பேர் வழியான பாண்டிச்செல்வி மற்றும் அவருக்கு துணையாக இருப்போர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மோசடியை வெளியில் கொண்டு சேர்கக உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
பாண்டிச்செல்வியின் வங்கி கணக்கில் அவர் மோசடியாக செய்த பணப்பரிமாற்றம் , UPI – Gapay, அனைத்தும் ஆதாரமாக புகார் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்…