தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவ கூட்டமைப்பு துவங்கப்பட்டது

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவ கூட்டமைப்பு என்ற அமைப்பு இன்று துவக்கப்பட்டது.
உலக மருத்துவர் குடும்பத்தின நாளான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இன்று தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவ கூட்டமைப்பு துவக்கப்பட்டது. அதோடு இந்த கூட்டமைப்பின் பெயர்ப்பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பு தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெஜிஸ்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் தலைவர் செல்டன் அருள்தாஸ் தலைமை உரை நிகழ்த்தினார்.
விழாவில் நீனா நானா புகழ் கோபிநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் சின்னத்திரை கலைஞர்கள் பலர் பங்கேற்று நிகழ்ச்சிக்கு வந்த மருத்துவ குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவக் கூட்டமைப்பின் தொடக்க விழா விழாவிற்கு தமிழக முழுவதும் இருந்து அனை மாவட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரது அவர்களது குடும்பத்தினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் எலக்ட்ரோபதி மருத்துவத்தின் முக்கியதுவம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் செல்டன் அருள்தாஸ் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.