அவ்னி சினிமேக்ஸ் சார்பில், குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனிஸ்காந்த், வானி போஜன், பக்ஸ், காளை, ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், சந்தான பாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மது சூதன் ராவ், ரிஷி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கேங்கர்ஸ்.
தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் கேத்ரின் தெரசா. அந்தப் பள்ளியில் அவரின் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவி காணாமல் போகிறார் அந்த மாணவிக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க போலீஸ் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
இந்த சூழ்நிலையில் பள்ளியில் உடற்கல்வி சுந்தர் சி சேறுகிறார். ஏற்கனவே வடிவேலு உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறார்.
மைம் கோபி மற்றும் அருள் தாஸ் இருவருக்கும் எதிராக கேத்ரின் தெரசா இருப்பதால் அவரை அனைவரும் முன்னிலையிலும் அவமானப்படுத்துகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியராக சேர்ந்த சுந்தர் சி அங்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து முகத்தை மறைத்துக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். ஒரு கட்டத்தில் அது மட்டும் காரணம் அல்ல என்று தெரிய வருகிறது.
சுந்தர் சி அவர்களை அடிக்க என்ன காரணம்? சுந்தர் சி பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியராக வர காரணம் என்ன? என்பதை ஜாலியாகவும் சிரிப்புடனும் சொல்லி இருக்கும் படமே கேங்கர்ஸ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் சி
இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : கிருஷ்ணமூர்த்தி
இசை : சத்யா
படத்தொகுப்பு : பிரவீன் அந்தோணி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)