காந்தி டாக்ஸ் விமர்சனம்

கிஷோர் பாண்டுரங் பேலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ளப்படும் காந்தி டாக்ஸ். 

மும்பையில் இருக்கும் ஒரு சேரி பகுதியில் குடி இருக்கிறார் விஜய் சேதுபதி. படுத்த படுக்கையாக இருக்கும் வயதான தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் எதிர் வீட்டில் குடியிருக்கும் நாயகி அதிதிராவை காதலிக்கிறார்.

விஜய் சேதுபதி பல கம்பெனிகளில் இன்டர்வியூக்கு சென்றும் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காததால் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

இந்த சமயத்தில் ஒரு கம்பெனியில் இன்டர்வியூக்கு செல்லும்போது 50,000 லஞ்சம் கொடுத்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள். 

மறுபுறம் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கிறார் அரவிந்த்சாமி அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. 

அதுமட்டுமில்லாமல் எதிர்பாராத விதமாக அரவிந்த்சாமியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து விடுகின்றனர். 

அரவிந்த்சாமியின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்து விடுகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அரவிந்த்சாமியும் விஜய் சேதுபதியும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு என்னவானது? விஜய் சேதுபதிக்கு வேலை கிடைத்ததா? இல்லையா?  அரசாங்கத்தால்  பறிமுதல் செய்யப்பட்ட அரவிந்த்சாமியின் சொத்துக்கள் மீண்டும் அவரிடம் கிடைத்ததா? இல்லையா? என்பதே காந்தி டாக்ஸ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து & இயக்கம் : கிஷோர் பாண்டுரங் பேலேகர்

ஒளிப்பதிவு : கரண் பி. ராவத்

படத்தொகுப்பு : ஆஷிஷ் மத்ரே

இசை : ஏ ஆர் ரகுமான் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)