ஆதிமூலம் கிரியேஷன்ஸ் – ஜெய் கிரண் தயாரிப்பில், ஷெரீஃப் இயக்கத்தில், கேபிஒய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்ரமணியன், ஆராத்யா ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளப்படும் காந்தி கண்ணாடி.
நாயகனாக அறிமுகமாகியிக்கும் பாலா பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தரும் (ஈவன்டா மேனேஜ்மென்ட்) நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்தி வேல், தன் காதலி அர்சசனாவை திருமணம் செய்து கொள்ள சொத்து & சொந்த பந்தங்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து, தனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
அவர்களுக்கு குழந்தை இல்லை என்றாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த காதலுடன் தங்களுடைய 60 வயது வரை இருந்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் தனது மனைவி அர்ச்சனாவின் ஆசையான 60 வது கல்யாணத்தை நிறைவேற்ற நாயகன் பாலாவை, பாலாஜி சக்திவேல் சந்திக்கிறார். பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா தம்பதியின் 60 வது திருமணத்தை பணம் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார். ஆனால், பாலாஜி சக்திவேலோ தனது காதல் மனைவியின் ஆசையாக மட்டுமல்லாமல் ஏக்கமாக பார்க்கிறார். எப்படியாவது திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்.
அர்ச்சனாவின் ஆசைப்படி 60 வது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த பாலா கேட்ட பணத்திற்கு மேலே அதிக அளவில் பணம் பாலாஜி சக்திவேலுக்கு கிடைக்கிறது. பணம் கிடைத்து விட்டது என்று சந்தோஷத்தில் பாலாவும், மனைவிவியின் ஆசையை நிறைவேற்ற போகிறோம், என்ற சந்தோஷத்தில் பாலாஜி சக்திவேலும் இருக்கும் சமயத்தில், அரசின் அதிரடி அறிவிப்பாள் அவர்களிடம் இருக்கும் பணம் செல்லாமல் போகிறது.
பணத்தை மாற்றி எப்படியாவது 60வது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்கிறார், அதே நேரத்தில் பணம் மாற்றுவதையும் லாபத்தின் அடிப்படையிலேயே பார்க்கும் பாலா, பாலாஜி சக்திவேலின் ஆசைப்படி அறுபதாம் கல்யாணத்தை நடத்தினாரா? இல்லையா? என்பதே காந்தி கண்ணாடி படத்தோட மிதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஷெரீஃப்
இசை : விவேக்-மெர்வின்
தயாரிப்பு : ஆதிமூலம் கிரியேஷன்ஸ் – ஜெய் கிரண்

