அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில், அபினய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் கேம் ஆஃப் லோன்ஸ்.
நிவாஸ் ஆதித்தனும், எஸ்தரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
நிவாஸ் ஆதித்தன் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து விடுவது மட்டுமல்லாமல் பணத்திற்காக ஆன்லைனில் இருந்து கடனாக பெறுகிறார்.
மனைவி எஸ்தர் இது எதுவும் தெரியாமல் வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.
ஆன்லைனில் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அதனை வசூலிப்பதற்காக ஒரு பிரைவேட் ஏஜென்சிலிருந்து அபிநையும் ஆத்விக்கும் நிவாஸின் வீட்டிற்கு வருகிறார்கள்.
நிவாஸ் வாங்கிய பணம் வட்டியுடன் சேர்த்து 68 லட்சத்திற்கு மேல் இருப்பதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
68 லட்சம் பணத்தை நிவாஸால் கட்ட முடிந்ததா? இல்லையா? நிவாஸ் வாங்கிய கடன் அவரின் மனைவி எஸ்தருக்கு தெரிந்ததா? இல்லையா? என்பதே கேம் ஆப் லோன்ஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : அபிஷேக் லெஸ்லி
தயாரிப்பாளர் : என். ஜீவானந்தம் ஜேஆர்ஜி தயாரிப்பு
DOP : சபரி
எடிட்டர் : டி. பிரதீப் ஜெனிபர்
கலை : சாஜன்
இசையமைப்பாளர் : ஜோ கோஸ்டா
அசோசியேட் டைரக்டர் : வினோ
உதவி இயக்குனர் : கிளாட்சன்
கதை : அபிஷேக் லெஸ்லி
திரைக்கதை மற்றும் வசனங்கள் : அபிஷேக் லெஸ்லி, சிவா, சுப்ரமணியன், வினோ
மக்கள் தொடர்பு : ஆர் மணி மதன்