ககனாச்சாரி (மலையாளம்) விமர்சனம்

அஜித் விநாயகா பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், அஜு வர்கீஸ்,
அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ்,
கணேஷ் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ககனாச்சாரி.

ககனாச்சாரி படத்தின் கதை 2050 காலத்தில் நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குகிறது. ஏலியன்களின் படையெடுப்பு நடக்கிறது.

பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் மக்களும் அச்சத்தோடு வாழ்கிறார்கள் அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசு கருவி ஒன்றைப் பொருத்துகிறது, அதனை காவல்துறை கண்காணித்து வருகிறது.

இப்படி இருக்கும் காலகட்டத்தில் முன்னாள் ராணுவ வீரரான கணேஷ் குமார் எதிர்கால பயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல சாதனங்களை உருவாக்கி பாதுகாப்பான ஒரு இடத்தில் வசித்து வருகிறார். அவருடன் கோகுல் சுரேஷும், அஜுவர்கிஸும் இருக்கிறார்கள்.

கணேஷ்குமாரை பற்றி ஒரு டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக ஒரு தொலைக்காட்சியில் இருந்து அவரை பார்க்க வருகிறார்கள்.

அப்போது தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் தன் வாழ்வில் சந்தித்த ஏலியன் சம்பவங்கள் பற்றியும் சொல்கிறார்கள்.

அது என்ன எந்த மாதிரி சம்பவங்கள் எதிர்கொண்டார்கள் என்பதே ககனாச்சாரி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : அருண் சந்து
தயாரிப்பு : அஜித் விநாயகா பிலிம்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர் : கிரிஷாந்த்
எழுத்து : அருண் சந்து – சிவா சாய்
ஒளிப்பதிவு : சுர்ஜித் எஸ் பை
இசை : சங்கர் சர்மா
எடிட்டிங் : சீஜய் அச்சு
VFX : மெராகி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)