பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.
இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்…
இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்…
இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது.
இசை – C.சத்யா. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.
எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்….மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.