ஃப்ரைடே விமர்சனம்

ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், மைம் கோபி, கே பி ஒய் தீனா, அனீஸ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஃப்ரைடே. 

கதாநாயகன் அனீஸ் மாசிலாமணி, KPY தீனா  மற்றும் கலையரசன் இவர்கள் ஒரு ரவுடி கும்பலை கொலை செய்வதற்காக முயற்சி செய்கின்றனர். 

அவன் தப்பிக்க அந்த கும்பலிடமிருந்து இவர்கள் மூன்று பேரும் தப்பி ஓடுகிறார்கள். தீனாவிற்கு கத்திக்குத்துப்படுகிறது மூன்று பேரும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வருகின்றனர். அங்கு வந்து தீனாவுக்கு  முதலுதவி செய்து காப்பாற்றப்படுகிறார். 

இந்த சமயத்தில் அனீஸ் வெளியே சென்ற சமயத்தில் தீனா வேறு ஒரு நபருக்கு போன் செய்து சீக்கிரம் வந்தால் அவனை கொலை செய்து விடலாம் என்று தகவல் கொடுக்கிறார்.

அனிஸும் தீனாவும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்றும் தான் கத்தியை எடுத்ததற்கு என்ன காரணம் என்று சொல்கிறார். 

அரசியல்வாதியும் ரவுடியுமான மைம் கோபியின் வலது கையாக இருப்பவர் தான் அனிஷ். மைம்கோபி யாரை சொல்கிறாரோ அவர்களை கொலை செய்வது தான் அனிஷின் வேலையாக இருந்தது. தம்பியும் இந்த தொழிலுக்கு வர நினைக்கிறார் ஆனால் தம்பியை வெளிநாட்டிற்கு அணுப்ப வேண்டும் என்பதே அனீசுக்கு ஆசை. அவருடன் இருந்தால் தம்பியும் அங்கு வந்துவிடும் என்று அதிலிருந்து வெளியேற நினைக்கிறார்.

அனீஷ் தான் நினைத்தபடி தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாரா? இல்லையா? தீனா யார்? எதற்காக அணிஷை கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே ஃப்ரைடே படத்துடன் மீதீக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி

கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ்

ஒளிப்பதிவு – ஜானி நாஷ்

இசை – டுமே

படத்தொகுப்பு – பிரவீன் M

கலை – கார்த்தி லோகா

சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி

ஒலி கலவை – பிஜூ ஆண்டனி

வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G

ஒப்பனை – நீலா ஜீவன்

விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா

மக்கள் தொடர்பு – திரு

தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures

விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.