சத்யசிவா இயக்கத்தில், எம்.சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மு ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன் ஆகியோர் நடிப்பில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள படம் தான் ஃப்ரீடம்.
1990 இல் அகதிகளாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள் சில தமிழர்கள். அவர்களை சில இடங்களில் கேம்ப அமைத்து தங்க வைக்கப்படுகிறார்கள்.
அந்த கேம்பில் லிஜோ மோல் ஜோஸீம் இருக்கிறார். சில நாட்களில் அவரின் கணவரான சசிக்குமாரும் அந்த கேம்புக்கு வந்து விடுகிறார்.
அந்த சமயத்தில் முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை தற்கொலைப்படையினர் கொலை செய்கின்றனர்.
இந்த கொலை வழக்கில் அகதிகளாக வந்தவர்களை சந்தேகப்பட்டு விசாரிப்பதற்காக என்று சொல்லி ஒரு 45 நபர்களை பல்வேறு கேம்ப்களில் இருந்து வேலூர் கோட்டைக்கு விசாரணைக்கு அழைத்து செல்கிறார்கள். சசிகுமாரிடம் துப்பாக்கி இருப்பதால் சசிக்குமாரையும் சந்தேகப்பட்டு அழைத்து செல்கிறார்கள்.
அந்த வேலூர் கோட்டையை ஜெயில் போல செட்டப் செய்து அவர்கள் அனைவரையும் அடைத்து வைத்து சித்திரவதைக்கு ஆளாக்குகிறார்கள்.
அவர்களை ஐந்து வருடங்களாக அதிலேயே அடைத்து வைத்திருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தை பார்ப்பதற்கும் குடும்ப ஆட்கள் இவர்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
எத்தனை மனுக்கள் அரசாங்கத்திற்கு போட்டாலும் அத்தனையும் அதிகாரிகளே எடுத்து எரித்து விடுவதால் அவர்களுக்கு பலன் அளிக்காமல் போகிறது.
ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஆயத்தமாகிறார்கள் அங்கு இருந்தவர்கள் தப்பித்தார்களா? இல்லையா?
மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தார்களா? இல்லையா? என்பத6 ஃப்ரீடம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : பாண்டியன் பரசுராமன்
இணை தயாரிப்பாளர் : சுஜாதா பாண்டியன்
இயக்கம் : சத்யசிவா
இசை : ஜிப்ரான்
டாப் : என்.எஸ்.உதயகுமார்
தொகுப்பாளர் : ஸ்ரீகாந்த் என்.பி
கலை : சி.உதயகுமார்
பாடல் வரிகள் : சினேகன் – மோகன் ராஜன் – அருண் பாரதி
அதிரடி : டி.ரமேஷ் – டான் அசோக் – டேஞ்சர் மணி
இணை இயக்குனர் : விஜய் பிரசாத்
இணை இயக்குனர் : ஷங்கர் நாக் விஜயன்
ஆடை வடிவமைப்பாளர் : சிவரஞ்சனி
ஒலிப்பதிவு : ஹரிஷ்
மக்கள் தொடர்பு : சதிஷ் (AIM)

