ஆர்.ஜி.ஸ்டோன் யூராலஜி & லேப்பராஸ்கோபி மருத்துவமனை டாக்டர் பீம்சென் பன்சால் அவர்களால் தரம் வாய்ந்த சிறுநீரக சிகிச்சையை கருத்தியலாக கொண்டு 1987ம் ஆண்டு மும்பையில் துவங்கப்பட்டது. 33 ஆண்டு வரலாற்று சிறப்புடைய ஆர்.ஜி.ஸ்டோன் யூராலஜி & லேப்பராஸ்கோபி மருத்துவமனை அர்பணிப்பும் செயல்திறனும் மிக்க மருத்துவர் குழுவின் ஆதரவுடன் நோயாளிகளுக்கு ஆற்றல் மிக்க சிகிச்சையை வழங்கக்கூடிய ஒரு ஊக்கம் மிகுந்த பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை தங்களது 33 ஆண்டுகால மருத்துவசேவையை நினைவு கூறும் வகையில் தற்போது நாடு முழுவதும் இலவச சிறுநீரக பரிசோதனை முகாமை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள ஆர்.ஜி.ஸ்டோன்மருத்துவமனையில் வரும் அக்டோபர் 30ம் தேதி வரை இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெறுகின்றது. இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளும் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனைகள் செய்வது மட்டுமின்றி உயர் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளில் 10% முதல் 30% சதவீதம் வரை கட்டண தள்ளுபடி வழங்குகிறது.
இதுகுறித்து டாக்டர்.D.வெங்கட்சுப்ரமணியன்,சிறுநீரககலந்தாலோசனைநிபுணர், ஆர்.ஜி. ஸ்டோன் மருத்துவமனை கூறுகையில், நோயாளிகளின் திருப்தி என்பதே ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையின் தாரக மந்திரமாகும். ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம்களை நடத்துவதன் வாயிலாக பெருநிறுவன சமூக பொறுப்பை தொடர்ந்து தன் தோள் மீது சுமந்து வருகிறது. 33ம் ஆண்டு விழாவை கொண்டாடும் சிறப்பு மிகுந்த இத்தருணத்தில் ஆர்.ஜி.ஸ்டோன்மருத்துவமனை, சென்னை கிளையில் ஒரு விசேஷ இலவச பரிசோதனை முகாமை நடத்திவருகிறது. இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் நோயாளிகளுக்கு சிறுநீரக சிகிச்சை நிபுணர்களின் கலந்தாலோசனை, சிறுநீரக பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. மேலும் உயர் தர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் 10% முதல் 30% சதவீதம் வரை கட்டண தள்ளுபபடியும் வழங்கப்படுகிறது. இந்த இலவச பரிசோதனை முகாம் வரும் அக்டோபர் 20ம் தேதி வரை வார நாட்களில் தினமும் காலை10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடைபெறவுள்ளது என்று கூறினார்.
ஆர்.ஜி.ஸ்டோன்மருத்துவமனை தற்போது சென்னை, டெல்லி, மும்பை, கோவா, லூதியானா மற்றும் கொல்கத்தா நகரங்களில் கிளைகளை கொண்டுள்ளதுடன் நாட்டிலேயே முதல் பல்வகை சிறுநீரக சிறப்பு மருத்துவமையமாக செயல்பட்டு வருகிறது. ஆர்.ஜி. ஸ்டோன் மருத்துவமனை நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் நோயாளிகளுக்கென சிறுநீரக கற்களுக்கான லித்தோட்ரிப்ஸி சிகிச்சை முறை; பித்தப்பைகற்கள், குடலிறக்கம், குடல்வாலழற்சி, சிறுநீரககட்டிகள், சினைப்பைக்கட்டிகள், கருப்பை நார்திசுக்கட்டிகள், கருப்பை/சினைப்பை நீக்கம், ஆண் & பெண் மலட்டுத்தன்மை முதலியவற்றுக்கான லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைமுறை; கற்கள் முதலியவற்றுக்கான என்டோஸ்கோப்பி சிகிச்சைமுறை; பிராஸ்டேட் மற்றும் சிறுநீர் கற்களுக்கான லேசர் அறுவைசிகிச்சை; மூலவியாதிக்கான ஸ்டேப்ளர் மூலவெட்டு சிகிச்சை உள்ளிட்ட 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெற்றகிரமான சிகிச்சை வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. ஆர்.ஜி.
ஸ்டோன் மருத்துவமனை தனித்து நின்று 25,000க்கும் மேற்பட்ட பிராஸ்டேட் சுரப்பி பிரித்தெடுப்பு லேசர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு 9962860000 என்கிற எண்ணில் மருத்துவமனையை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.