போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 16 பேரிடம் பண மோசடி செய்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. வேலைக்கு உத்தரவாதம் அளித்து சுமார் 95 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், இன்று கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது நண்பர்கள், வீடு மற்றும் கடைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.