ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதுச்சேரி-ஹைதராபாத் இடையேயான விமான சேவை தொடங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் படிப்படியாக கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய அவர், மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா நகரங்கள் வளர்ச்சி அடையும் எனவும், தொழில் வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.