கருவிழிக் கூம்பல் நோய்க்காக ஒரு தனித்துவமான, புதுமையான அறுவைசிகிச்சை உத்தியான, ‘CAIRS’-ஐ உலகில் முதல் முறையாக செயல்படுத்திய டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
கருவிழிக் கூம்பல் நோய்க்கான சிகிச்சை மற்றும் நீட்டப்படும் நோய்நிலைகளுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக CAIRS என்ற எளிய கட்டணத்திலான சிகிச்சைமுறை இருக்கிறது.
கருவிழிக்கூம்பல் நோய்க்கு ஒரு புதுமையான அறுவைசிகிச்சையை தாங்கள் வெற்றிகரமாக செய்திருப்பதாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இன்று அறிவித்திருக்கிறது. இந்த கண் நோயில் கருவிழிப்படலமானதுமென்மையாகி, படிப்படியாக ஒரு கூம்பு வடிவமாக மாறுவதால் பார்வைத்திறனில் கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. உலகில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கிற இந்த புத்தாக்கமான அறுவைசிகிச்சை உத்தியான CAIRS (CORNEAL ALLOGENIC INTRA-STROMAL RING SEGMENT), பணியாற்றுகிறபோது கடுமையான அசௌகரியத்துடன், அதிகளவு பார்வைத்திறன் இழப்பால் அவதியுற்ற 25 வயதாகிற உள்அலங்கார சேவை வடிவமைப்பாளருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இந்த புத்தாக்கமான CAIRS சிகிச்சைமுறையானது, லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கேட்டராக்ட் அண்டு ரிஃபாரக்ட்டிவ் சர்ஜரியின், ‘Best paper award’-ஐ (கருவிழிக்கூம்பல் நோய் மற்றும் கருவிழி நீள்வு நிலைக்கான சிகிச்சைக்காக) பெற்றிருக்கிறது. அமெரிக்க கண்சிகிச்சையியல் அகாடெமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மற்றும் இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ரிஃபாரக்ட்டிவ் சர்ஜரிவலைதளத்திலும் இதுகுறித்த மிக விரிவான விளக்கம் இடம்பெற்றிருக்கிறது. கௌரவமிக்க ரிஃபாரக்ட்டிவ் சர்ஜரி இதழிலும் விரைவில் பிரசுரிக்கப்படவுள்ளது.
இந்நோயாளி, அவரது இரு கண்களிலும் மோசமான பார்வைக்கு வழிவகுத்திருக்கிற அவரது கருவிழியில் ஒரு கடுமையான குறைபாட்டோடு மருத்துவமனைக்கு வந்தார். 3 ஆண்டுகளுக்கும் அதிகமாக மங்கலான மற்றும் உருத்திரிந்த பார்வை அவருக்கு இருந்தது. பார்வைத்திறன் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது, அவரது வழக்கமான பணியையும் மற்றும் பிற செயல்பாடுகளையும் பாதித்தது.
இந்த சிகிச்சை உத்தியை கண்டுபிடித்தவரும் டாக்டர். அகர்வால்ஸ் ரிஃபார்க்ட்டிவ் அண்டு கார்னியா பவுண்டேஷனின் தலைவரும் இயக்குநருமான டாக்டர். சூசன் ஜேக்கப், இது குறித்து விளக்கமளிக்கையில், “இந்த நோயாளிக்கு இரு கண்களிலும் கருவிழிக்கூம்பல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையின் கீழ், கருவிழியை வலுப்படுத்தும் சிகிச்சை முறையானது, அதிக பவர் மற்றும் சீரற்ற கருவிழிப்படலத்தோடே நோயாளியை இருக்கச் செய்யும். எனினும், இந்த புதிய, புத்தாக்கமான CAIRS சிகிச்சை உத்தியோடு சேர்த்து கருவிழியை வலுப்படுத்தும் செய்முறையும் மேற்கொள்ளப்பட்டபோது, நோயாளியின் பார்வைத்திறனானது, 6/12-க்கு நன்றாக அபிவிருத்தி அடைந்தது. அத்துடன் கண் கண்ணாடிகளை அணியும்போது, 6/6 ஆக மேலும் முன்னேற்றம் கண்டது,” என்று கூறினார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையும் செயல் இயக்குநர் டாக்டர். அஷ்வின் அகர்வால் பேசுகையில், “புத்தாக்கமான உத்திகளை பயன்படுத்துவதன் வழியாகவும், புதிய சிகிச்சைமுறைகளை செயல்படுத்துவதன் வழியாகவும், கண் மருத்துவ சிகிச்சைத்துறையில் மிகச்சிறப்பான மாற்றத்தை நாங்கள் கொண்டுவருகிறோம். விருதுகள் வென்றிருக்கிற இத்தகைய CAIRS சிகிச்சை முறைகள், கருவிழிப்படல சீர்கேடுகளை சரிசெய்வதில் அதிக பயனளிப்பதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வைத்திறன் துல்லியத்தை மேம்படுத்தும் சாத்தியம் அதிகமாகியிருக்கிறது. இத்தகைய நோயாளிகளிடம் கருவிழி மாற்றுப்பதியத்திற்கான அவசியத்தை தவிர்ப்பதற்கான ஒரு திறன்மிக்க சிகிச்சைமுறையாகவும் இதை பரிசீலிக்கலாம்,” என்று கூறினார்.
கருவிழிக்கூம்பல் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு செய்யப்படும் இந்த புதிய கண்டுபிடிப்பான CAIRS சிகிச்சை உத்தியில் இரு அரை வட்ட வளையங்களின் வடிவில் கருவிழி பிரிவுகளை உட்பதியம் செய்வதன் மூலம் கருவிழியின் வடிவம் மாற்றப்படுகிறது மற்றும் பார்வைத்திறனில் முன்னேற்றம் கிடைக்கச்செய்யப்படுகிறது. இது, வழக்கமான ICRS சிகிச்சைமுறைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதன்மூலம் மனித உடலுக்கு செயற்கையாக தயாரிக்கப்படுகிற பொருளின் பயன்பாட்டை தவிர்க்கிறது. ICRS சிகிச்சை முறையில் குறிப்பிடத்தக்க பார்வைத்திறன் முன்னேற்றத்தை பல நோயாளிகள் பெறுகின்ற போதிலும் பார்வைத்திறனில் குறிப்பிடத்தக்களவு அல்லது சிறப்பான முன்னேற்றம் காணப்படாத சில நேர்வுகளும் இருக்கின்றன. இதற்கும் மேலாக, இந்த செயற்கையான பொருளானது கண்ணுக்குள் ஒரு அந்நிய பொருளாகவே தொடர்ந்து நீடிக்கிறது. புதிய கண்டுபிடிப்பான CAIRS சிகிச்சை உத்தியில் செயற்கை பிரிவுகளுக்கு பதிலாக கண்தானம் அளிப்பவரின் திசு பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை உத்தி செயல்முறையானது, அதிக செலவு பிடிக்காததாகவும், சிக்கனமானதாகவும் இருக்கிறது.
இந்த புதிய சிகிச்சைமுறையில் பலனடைந்த நோயாளியான திரு. மோகன் குமார், “ஒரு உள் அலங்கார வடிவமைப்பாளராக நான் இருப்பதால் எனது பணியில் ஏராளமாக திட்டமிடல் வரைபடங்களை உருவாக்குவது அவசியப்படுகிறது. எனது பார்வைத்திறன் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதையும் எனது பணியை அது பாதிப்பதையும் நான் உணர்ந்தேன். எனது தினசரி செயல்பாடுகளை மேற்கொள்வதும் எனக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. இந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு, இன்றைக்கு சிரமமில்லாமல் பார்வைத்திறன் எனக்கு திரும்ப கிடைத்திருக்கிறது. கூடுதலாக, சிகிச்சைமுறை நடைபெற்றதிலிருந்து ஒரு வார காலஅளவுக்குள்ளேயே நான் விரைவாக இயல்புநிலைக்கு மீண்டிருக்கிறேன்,” என்று மகிழ்ச்சியோடும், நன்றியோடும் தெரிவித்தார்.