இந்தியாவில் நாளுக்கு நாள் மல்யுத்தம் ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்களில் பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் ரவிக்
மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை விடுதியில், கடந்த 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், இந்தியா முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் மல்லுக்கட்டினர். மகளிர் பிரிவில் 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ மற்றும் 70+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் மற்றும் ஆண்கள் பிரிவில் 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ மற்றும் 90+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் என மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதன் மாபெரும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி வாகை சூடிய வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், தெற்காசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொதுச்