பயர் விமர்சனம்

ஜே எஸ் கே தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே, சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பயர்.

பிசியோதெரபி மருத்துவராக இருக்கும் பாலாஜி முருகதாஸை ஒரு மர்ம நபர் தலையில் அடித்து தூக்கி செல்கிறார் இப்படி தான் ஆரம்பமாகிறது படத்தின் முதல் காட்சி.

தன் மகனை காணவில்லை என்று பாலாஜி முருகதாஸின் பெற்றோர் காவல்துறை அதிகாரி ஜே எஸ் கேவிடம் புகார் அளிக்கிறார்கள்.

பாலாஜி முருகதாஸ் எப்படி காணாமல் போனார்? அவருக்கு என்ன நடந்தது யாருடன் தொடர்பு இருந்தது என்பதை தீவிரமாக கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் ஜே எஸ் கே.

இந்த வழக்கை விசாரிக்கும் போது தான் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகிறது. சாக் ஷி அகர்வால், சாந்தினி, ரட்சிதா மகாலட்சுமி, காயத்ரி, இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் பல கல்லூரி பெண்களும் குடும்ப பெண்களும்
பாலாஜி முருகதாஸ் வழக்கில் சிக்கி உள்ளார்கள் என்பது என்ற உண்மை தெரிய வருகிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில் காசியை தான் கொன்றதாக பெரியவர் ஒருவர் போலீஸிடம் சரண் அடைகிறார்.
அதேசமயம் பாலாஜி முருகதாஸ் உயிரோடு இருக்கிறார் என்று போன் கால் வருவது வந்ததாக அவரின் பெற்றோர் வந்து சொல்கிறார்கள்.

பாலாஜி முருகதாஸ் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? அந்தப் பெண்களுக்கும் பாலாஜி முருகதாஸ் இருக்கும் என்ன தொடர்பு? அவரின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே பயர் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் : ஜே.எஸ்.கே
வசனம் : எஸ்.கே.ஜீவா
டிஓபி : சதீஷ்.ஜி
எடிட்டர் : சிஎஸ் பிரேம்குமார்
ஸ்டண்ட் : தினேஷ் காசி
கலை இயக்குனர் : சுசீதேவராஜ்
நடனம் : மானஸ்
இசையமைப்பாளர் : டி.கே
பாடலாசிரியர் : மதுர கவி (டும் டும் கல்யாணம்)
பாடலாசிரியர் : ரா (மெது மெதுவாய்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

ரேட்டிங் 3.5/5