ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், அபாஸ் அ.ரஹ்மத் இயக்கத்தில், உறியடி விஜய்குமார், மோனிஷா மோகன் மேனன், சங்கர்தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், கார்த்திகேயன் சந்தானம், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா ஆகியோர் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கும் படம் “ஃபைட் கிளப்”.
கார்த்திகேயன் சந்தானம்,
குத்துச்சண்டை வீரராக இருக்கிறார், அவர் தன்னோட பகுதியில் உள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் விளையாட்டு வீரர்களாக்க ஆசைப்படுகிறார். அதற்காக கதாநாயகன் விஜய்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் சந்தானத்தின் சொல்படி கேட்டு நடக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு எதிராக சிறுவர்களையும், இளைஞர்களையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி, கஞ்சா விற்பனையை அவர்களை வைத்தே செய்து வரும் சங்கர் தாஸ், தன்னுடைய தொழிலுக்கு எதிராக செயல்படும் கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க திட்டம் தீட்டுகிறார்.
இதேசமயம் சங்கர் தாஷுடன் சேர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபடும் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ், சங்கர் தாஷுடன் சேர்ந்து அண்ணன் கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகிறார்.
அவினாஷ் சிறைக்கு சென்றுவிட சங்கர் தாஸ் லோக்கல் அரசியல்வாதியாக மாரி வளர்ந்து அந்த பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் சங்கரதாசால் ஏமாற்றப்பட்ட அவினாஷ் அவரை பழிவாங்க நினைக்கிறார். அதற்காக விஜயகுமாரின் உதவியை நாடுகிறார் அதன் பிறகு என்ன நடந்தது அவினாஷ் சங்கர் தாசை பழி வாங்கினாரா? இல்லையா?
விளையாட்டு வீரராக வேண்டும் என்று நினைத்த விஜயகுமாரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே ‘ஃபைட் கிளப்’ படத்தின் மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : கோவிந்த வசந்தா
எழுத்தாளர் : சசி
ஒளிப்பதிவு : லியோன் பிரிட்டோ
படத்தொகுப்பாளர் : கிருபாகரன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்