ஆடிப்பெருக்கினை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள்

 
ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்பது நம்முடைய முன்னோர்கள் கூறிய பொன்மொழி, ஆடிப்பட்டத்தில் விவசாயப்பணிகள் ஆரம்பித்தில் மகசூல் அமோகமாக வரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாக ஆடிமாதங்களில் மழை பெய்யமால் பெய்து போனதால் கடந்த சில ஆண்டுகளாக ஆவணி,புரட்டாசி மாதங்களில் விவசாயிகள் விவசாய பணியினை மேற்க்கொண்டனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகளுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் பகுதியில் மானவாரி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் ஆடிப்பெருக்கான இன்று தங்களது நிலத்திற்கு பூஜைகள் நடத்தி விவசாய பணிகளை மேற்க்கொண்டுள்ளனர்.
 
வறட்சி, அரசின் உதவிகள், பயரிகாப்பீடுகள் கிடைக்கவில்லை, போராட்டம் என்று இருந்த விவசாயிகளுக்கு சமீபத்தில் பெய்த மழை புது உற்சாகத்தினை தந்துள்ளதால் ஆர்வமுடன் இன்று விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு கண்டிப்பாக விவசாயம் செழிக்கும், நல்ல மகசூல் கிடைக்கும் என்பது விவசாயிகள் நம்பிக்கையூடன் தெரிவித்துள்ளனர்.