கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து மின்சாரம் எடுத்து வருகின்றனர்.இதற்கிடையில் திருமங்கலகுறிச்சியில் பகுதியில் தனியார் நிறுவனத்தின் காற்றாலை உள்ளது. இந்த காற்றாலையில் தயாரிக்கப்படும் மின்சாரம் திருநெல்வேலி அருகேயுள்ள மின்சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக தனியார் நிறுவனம், திருமங்கலகுறிச்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குளங்கள் வழியாக கொண்டு செல்வதற்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களிடம் முறையான அனுமதி பெறமால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விவசாய நிலங்களில் மின்கம்பங்களை அமைப்பதாக விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் மின்கம்பங்களை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி கயத்தார் – கழுகுமலை சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.