கே.பாலாஜி தயாரிப்பில், செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயாரோஹணம், ஸ்ரீஜா ரவி,
பார்த்திபன் குமார், மோகனசுந்தரம்,
அரவிந்த் ஜானகிராமன், ஆர்ஜே பிரியங்கா, சந்தோஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஃபேமிலி படம்.
ஒரு அழகான நடுத்தர வர்க்க குடும்பம். அம்மா, அப்பா, மூன்று மகன்கள் மற்றும் தாத்தா.
முதல் மகன் விவேக் பிரசன்னா வழக்கறிஞராகவும், இரண்டாவது மகன் பார்த்திபன் குமார் தனியார் நிறுவனத்திலும், மூன்றாவது மகன் உதய் கார்த்திக் சினிமா ஆசையில் இயக்குனராகவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
நாயகன் உதய், தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி இயக்குனாக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில், தயாரிப்பாளர் ஒருவர் உதய் கார்த்திக்கின் கதை பிடித்து போய் படம் இயக்க ஒப்பந்தமும் செய்து விடுகிறார். படத்தில் தனது தம்பியான பிரபல ஹீரோவை கமிட் செய்ய முடிவு செய்கிறார் தயாரிப்பாளர்.
ஆனால் அந்த ஹீரோவோ, கதை நன்றாக உள்ளது ஆனால், உதய் கார்த்திக் சரியாக எடுப்பாரா என்ற சந்தேகத்தில் அவர் இயக்கினால் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். அதனால் தயாரிப்பாளரே இயக்குனராக மாறி அந்த படத்தை இயக்க முடிவு செய்து உதயிடம் கூற அவரிடம் போட்டி போட முடியாமல் ஓகே என்று சொல்லிவிட்டு கஷ்டத்துடன் வெளியில் வந்து விடுகிறார்.
பிறகு தன் தம்பிக்காக தாங்களே தயாரிப்பாளராக ஆகிவிட முடிவு செய்கிறார்கள் விவேக் பிரசன்னாவும் பார்த்திபன் குமாரும்.
பிறகு உதயின் மொத்த குடும்பமே சேர்ந்து படம் எடுக்க முடிவு செய்கிறார்கள். குடும்பமே சேர்ந்து படம் எடுத்தார்களா? இல்லையா? உதய் கார்த்திக் இயக்குனராக ஆனாரா? இல்லையா? என்பதை ஃபேமிலி படம் படத்துடன் மீதிக் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் : செல்வகுமார் திருமாறன்
தயாரிப்பாளர் : கே.பாலாஜி
DOP : மெய்யேந்திரன்
இசை : அனிவீ
எடிட்டர் : சுதர்சன்
பின்னணி இசை : அஜேஷ்
கலை : கே.பி.நந்து
ஸ்டண்ட் : சுகன்
ஆடை வடிவமைப்பாளர் : பொற்செழியன்
பாடலாசிரியர் : அகமது ஷ்யாம்/அனிவீ
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்