அஜினோமோட்டோ குழுமம் என்பது, உயர்தரமான சமையலுக்கான பதப்படுத்தும் நறுமணப்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தயாரித்து வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமாகும். 1909-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, 27 நாடுகளில் தற்போது இயங்கி வருகிறது. உணவுக்கு தனித்துவமான அற்புத சுவையை வழங்கும் உட்பொருளான எம்எஸ்ஜி (அஜினோமோட்டோ), இன்றைக்கு உலகளவில் மிகப்பிரபலமான சமையல் உட்பொருளாக திகழ்கிறது.
இக்கருத்தரங்கில் புகழ்பெற்ற டாக்டர். செஃப் வினோத் குமார், உணவுமுறை நிபுணர். தாரணி கிருஷ்ணன்,ஊட்டச்சத்து வல்லுநர் தேவிஸ்ரீ சுந்தரம் அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு. அட்சுஷி மிஷ்ஹுகு, அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோர், கலந்துகொண்டு அஜினோமோட்டோ குறித்த உண்மைகளையும் மற்றும் அதுகுறித்த பிற விவரங்களையும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்ற இல்லத்தரசிகளுக்கு விளக்கி கூறுவதற்காக கலந்துரையாடினர்.
அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு. அட்சுஷி மிஷ்ஹுகு பேசுகையில், “மாறுபட்ட சுவையான உமாமியை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு இயற்கையான, சமையலில் பயன்படுத்தப்படும் நறுமண பதப்படுத்தும் பொருளாக அஜினோமோட்டோ (எம்எஸ்ஜி) இருக்கிறது. பல்வேறு உணவு ஆதாரங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே மிகச்செறிவாக இருக்கும். 5 அடிப்படையான சுவைகளில் உமாமி சுவையும் ஒன்றாகும். காய்கறிகள், தக்காளி, பால், பாலாடைக்கட்டி போன்ற நாம் தினசரி பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் இது இருக்கிறது. சிறந்த மற்றும் சிக்கனமான பதப்படுத்தும் நறுமணப்பொருளை வழங்குவதன் மக்களை பசியுணர்வையும் ஊட்டச்சத்தையும் உயர்த்தும் நோக்கத்தோடு, முதல் உமாமி பதப்படுத்தும் பொருளாக (சீசனிங்) பொருளாக அஜினோமோட்டோ (எம்எஸ்ஜி) அறிமுகம் செய்யப்பட்டது,”என்று கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இல்லத்தரசிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு உமாமி சுவையை வழங்குவதற்காக டாக்டர். செஃப் வினோத்குமார், அஜினோமோட்டோவை சேர்த்து பயன்படுத்தி பன்னீர் 65-ஐ சமைத்துக்காட்டினார். அஜினோமோட்டோவுடன் பாலாடைக்கட்டி மிளகு. மல்லி மற்றும் இன்னும் பல உட்பொருட்களை உள்ளடக்கிய பன்னீர் 65 உமாமியின் அற்புதமான சுவை முழுமையாக நிறைந்ததாக இருந்தது. டாக்டர். செஃப் வினோத்குமார் இது குறித்து பேசுகையில், “இயற்கையாக கிடைக்கின்ற க்ளுட்டாமேட் தான், இன்னும் அதிகமாக உண்ணவேண்டுமென்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தி நமது சுவை அரும்புகளை தூண்டிவிடும் வகையில் சில உணவு தயாரிப்புகள் ஏன் இருக்கின்றன என்பதற்கு காரணமாக இருக்கின்றன. பழுத்தக்காளி, காளான்கள், பச்சைத்தேயிலை, சோயாசாஸ், மெதுவாக சமைக்கப்பட்ட சூப்புகள் மற்றும் பாலாடைக்கட்டி ஆகிய உணவுகளில் குளுட்டாமேட் அதிகமாக இருக்கிறது. நமது உடல்களில்கூட குளுட்டாமேட் இயற்கையாகவே இருக்கிறது. பிறபாலூட்டிகளோடு ஒப்பிடுகையில், மனிதர்களதுதாய்ப்பாலில் குளுட்டாமேட் அதிக செறிவுள்ளதாக இருக்கிறது,” என்று கூறினார்.
அஜினோமோட்டோவில் (எம்எஸ்ஜியில்) அடங்கியுள்ள கூறுகளான குளுட்டாமேட், சோடியம் (உப்பு) மற்றும் தண்ணீர் ஆகியவை குறித்து விளக்கமளித்த உணவுமுறை நிபுணர் டாக்டர். தாரிணி கிருஷ்ணன், “மோனோசோடியம் குளுட்டாமேட் என்பது குளுட்டாமிக் அமிலத்தின் சோடியம் உப்பாகும். ‘உமாமி’ என்ற ஜப்பானிய வார்த்தைக்கு, இறைச்சி மணத்துடன் தொடர்புடைய மிக இனிமையான சுவை என்று பொருள் கொள்ளலாம். குளுட்டாமிக் அமிலம் அல்லது குளுட்டாமேட் என்பது, இயற்கையாகவே கிடைக்கக்கூடிய ஒரு அமினோ அமிலமாகும். மக்களால் தினசரி சாதாரணமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் இயற்கையாகவே இது காணப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், தக்காளிகள், பாலாடைக்கட்டி ஆகியவை மட்டுமல்லாமல் தாய்ப்பாலிலும்கூட இந்த அமிலம் இருக்கிறது,” என்று கூறினார்.
ஊட்டச்சத்து வல்லுநரான தேவிஸ்ரீ சுந்தரம் பேசுகையில், “நொதிப்பு செய்முறை வழியாக இயற்கையான ஆதாரங்களினால் உருவாக்கப்படுகிற ஒரு நறுமண சுவை மேம்படுத்தியாக உலகெங்கிலும் எம்எஸ்ஜி பரவலாக பயன்படுத்தப்படுகிறது,” என்று குறிப்பிட்டார். அஜினோமோட்டோவின் சிறப்பான பலன்கள் குறித்து டாக்டர். தாரிணியும் மற்றும் தேவிஸ்ரீயும் வலியுறுத்தி பேசினர். “உணவு தயாரிப்புகளில் உப்பின் அளவை நாம் குறைப்போம் என்றால் அந்த உணவின் ஒட்டுமொத்த சுவையானது, குறைந்துவிடும். எம்எஸ்ஜியை பயன்படுத்துவதன் மூலம் அந்த உணவுத்தயாரிப்பின் சுவையை நம்மால் சிறப்பாக மேம்படுத்த முடியும்; அதே நேரத்தில் அதில் இடம்பெறுகிற உப்பின் நுகர்வை 30% அளவுக்கு குறைக்க முடியும். வயிற்றிலுள்ள குளுட்டாமேட் ஏற்பி செல்கள், ‘போதுமான உணவுண்ட உணர்வை’ வழங்குவதால்,உடற்பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கும், அஜினோமோட்டா உதவுகிறது. முதியவர்கள், அவர்கள் உண்ணும் உணவில் நல்ல சுவையை இரசித்து உண்பதன் மூலம் உணவு உட்கொள்வது மீது ஆர்வத்தை வெளிப்படுத்தவும் எம்எஸ்ஜி உதவுகிறது,“ என்று குறிப்பிட்டனர்.
அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் சந்தையாக்கல் துறை மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ் பேசுகையில், “அஜினோமோட்டோவின் பாதுகாப்பு அம்சமானது, மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுகளை கொண்டு பல்வேறு சர்வதேச அமைப்புகளால் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுவை மேம்படுத்திகளை பயன்படுத்துவதில் ஏற்கத்தக்க தினசரி உட்கொள்ளல் அளவை (ஏடிஐ) குறிப்பிடாமலேயே இருப்பதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அனுமதிக்கப்பட்டிருக்கிறது,” என்று கூறினார்.
அஜினோமோட்டோ இந்தியா குறித்து, அஜினோமோட்டோ குழுமத்தின் ஒரு அங்கமான அஜினோமோட்டோ இந்திய பிரைவேட் லிமிடெட், உயர்தரமான சீசனிங் (உணவு பதப்படுத்தும் பொருட்கள்) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. அமினோஅமில தொழில்நுட்பங்களில் பரவலான பயன்பாட்டின் வழியாக இந்தியாவில் மானுட உடல்நலத்திற்கும் மற்றும் உணவு கலாச்சாரத்திற்கும் பங்களிப்பு செய்வதே அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் குறிக்கோளாகும். 2003-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் சிறப்பாக இயங்கி வருகுிறது. அஜினோமோட்டோ இந்தியா குறித்து அதிகம் அறிய வருகை தரவும் : www.ajinomoto.co.in