எக்ஸ்ட்ரீம் விமர்சனம்

கமலாகுமாரி, ராஜ்குமார் தயாரிப்பில்,
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், ரச்சிதா மகாலட்சுமி, அபி நக்‌ஷத்ரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த் நாக், அம்ரிதா, சிவம் தேவ், ராஜேஷ்வரி ராஜீ, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜ சேகர், ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் எக்ஸ்ட்ரீம்.

ஒரு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் இடத்தில் பணிக்காக செல்பவர்கள் கான்கிரீட் வேலை செய்யும் பொழுது அந்த கான்கிரீட் தூணில் ஒரு பெண்ணுடைய சடலத்தை பார்க்கின்றனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க, கொலை செய்யப்பட்டு அந்தப் பெண்ணை கான்கிரீட் கலவையோடு சேர்த்து வைத்துள்ளது தெரிய வருகிறது.

வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ் கொலை செய்யப்பட்டு கான்கிரீட் கலவையில் வைத்து பூசப்பட்டுள்ள பெண் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகள் அபிநக்‌ஷத்ரா நட்சத்திரா என்று கண்டுபிடிக்கிறார்.

இந்த கொலையை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக வரும் சப் இன்ஸ்பெக்டர் ரச்சிதாவும் அவருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.

அபிநக்‌ஷத்ராவை பாலில் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது யார் என்று விசாரணையில் இறங்கும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜும் சப் இன்ஸ்பெக்டர் ரச்சிதாவும் கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? எதற்காக இந்த கொலை நடைபெற்றது கொலைக்கான காரணம் என்ன என்பதையும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை எக்ஸ்ட்ரீம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுதி இயக்கியவர் : ராஜவேல் கிருஷ்ணா

தயாரிப்பாளர் : கமலா குமாரி , ராஜ்குமார் .என்

ஒளிப்பதிவாளர் : டிஜே பாலா

எடிட்டர் : ராம்கோபி

இசை : ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்

நடன இயக்குனர் : பி.ராக் ஷங்கர்

ஸ்டண்ட் மாஸ்டர் : சிவம் எஸ்இவி

அசோசியேட் டிஓபி : கிஷோர்

ராமச்சந்திரன்

ஸ்டில்ஸ் : சுரேந்தர் ஆம்பி

பாடல் வரிகள் : R. S. ராஜ்பிரதாப்

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்