சுரேஷ். G யின் இயக்கத்தில் சார்லி, மோனிகா, சக்தி ரித்விக், ஜார்ஜ் மரியான், சூசன் ஜார்ஜ், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எறும்பு.
கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அண்ணா துரை. வட்டிக்கு கடன் வாங்கி, அதனை கொடுக்க முடியாமல் கடன் வாங்கியவரிடம் அவமானபடுகிறார்.
இவரின் மறைந்த முதல் மனைவிக்கு ஒரு மகள் ஒரு மகன், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் மற்றும் தன் அம்மாவுடன் வசித்து வருகின்றார்.
கடன் பிரச்சனைக்காவும், வாழ்வாதாரத்துக்காவும் தனது இரண்டாவது மனைவியுடன் கூலி வேலைக்கு செல்கிறார் அண்ணாதுரை. இந்த நேரத்தில் இவரது மகன் ரித்விக் தன் தம்பியின் தங்க மோதிரத்தை போட்டுக்கொள்ள ஆசை பட, பாட்டி கொஞ்ச நாள் மோதிரத்தை போட்டுக்கோ ஏன சொல்ல ஆவலுடன் அதை போட்டு கொள்ள. இரண்டு மூன்று தினத்தில் மோதிரத்தை தொலைத்து விட, சிறுவர்களான மகனும் மகளும் சித்தி அடிக்கு பயந்து மீண்டும் மோதிரம் வாங்க பல சிறிய சிறிய வேலைகள் செய்து பணம் சேகரிக்கிறார்கள்.
இருந்தாலும் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேரவில்லை. கூலி வேலைக்கு சென்ற அப்பாவும், சித்தியும் வீடு வந்து சேருகிறார்கள்.
மோதிரம் வாங்கினார்களா? இல்லை சித்தியுடன் மாட்டிக் கொண்டார்களா? என்பதே இரும்பு படத்தோட மீதி கதை
நகைச்சுவை மட்டுமல்லாது தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை எறும்பு படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் சார்லி.
காட்டு மன்னார் கோவிலின் அழகை ஒரு சித்திரம் போல படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் .ஒரு கந்து வட்டி நபரை கண் முன் காட்டுகிறார் M.S பாஸ்கர். ஜார்ஜ் மரியான் செய்யும் நகைச்சுவை படத்தை மேலும் பார்க்க வைக்கிறது.
மொத்தத்தில் எறும்பு சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் .