எங்க அம்மா ராணி – விமர்சனம்

மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.

தன்னுடைய கவனிப்பில்லாமல்தான் அவள் இறந்துவிட்டாள் என்ற குற்ற உணர்வுடன் இருக்கும் டாக்டரான சங்கர் அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டறிய முற்படுகிறார். அப்போது, அந்த குழந்தை வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனாள் என்று கண்டுபிடிக்கிறார். அந்த குழந்தைகள் இரட்டையர்கள் என்பதால் மற்றொரு பெண்ணுக்கும் அந்த நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அந்த பெண்ணையும் அவர் சோதிக்கிறார்.

பரிசோதனையில் அந்த பெண்ணுக்கும் வினோதமான நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. ஒருபக்கம் தனது கணவரை தேடும் பணியிலும், மறுமுனையில் தன்னுடைய மகளை அந்த நோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் தன்ஷிகா. இறுதியில், தனது கணவரை தன்ஷிகா தேடிக்கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு பெண்ணையாவது காப்பாற்றினாரா? தன்னுடைய பெண்ணுக்கு வந்துள்ள அந்த விநோதமான நோய்க்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்