“எனக்கு எண்டே கிடையாது” விமர்சனம்

Hungry Wolf புரொடக்ஷன்ஸ் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில், விக்ரம் ரமேஷ் இயக்கத்தில், விக்ரம் ரமேஷ், ஸ்வயம்சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் “எனக்கு எண்டே கிடையாது”.

நாயகன் விக்ரம் ரமேஷ், கால் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். நாயகி சுவயம்சித்தாவை பிக்கப் செய்து அவருடைய வீட்டில் ட்ராம் செய்யும் நேரத்தில், சுவயம்சித்தா தன் வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு செல்லுமாறு சொல்கிறார். நாயகன் விக்ரம் ரமேஷும் அவர் வீட்டுக்கு சென்று மது அருந்திவிட்டு போதையாகிறார். போதை தெளிந்து கிளம்பும் நேரத்தில் ஒரு ரூமில் ஆண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் சுவயம்சித்த திடீரென்று மயக்கமடைந்து விழுகிறார்.

இதனால் பயந்து வெளியே செல்ல நினைக்கிறார் நாயகன் விக்ரம் ரமேஷ். ஆனால் அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், அவரால் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார்.

இந்த நிலையில் அந்த வீட்டுக்குள் திருடுவதற்காக கார்த்திக் வெங்கட்ராமன் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜுவும் நுழைகிறார்.

இந்த மூன்று பேரும் அந்த வீட்டுக்குள் வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்தார்களா? மாட்டிக் கொண்டார்களா? சுவயம்சித்தாவுக்கு என்ன நடந்தது? வீட்டுக்குள் இருந்த ஆண் சடலம் யாருடையது? என்பது
தான் ‘எனக்கு எண்டே கிடையாது’ படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு: பசி ஓநாய் – கார்த்திக் வெங்கட்ராமன்

இயக்கம்: விக்ரம் ரமேஷ்

இசை: கலாசரண்