என் காதலே விமர்சனம்

”ஸ்கை வாண்டர்ஸ்” எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில், ஜெயலட்சுமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என் காதலே. 

நாயகன் லிங்கேஷ் மீனவனாக இருக்கிறார். சிறுவயதில் சுனாமியில் தன் தாய் தந்தையரை இழந்து விட்டு லிங்கேஷ் மாமன் மதுசூதனின் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். 

 

மாமன் மகளாக வரும் திவ்யா, மாமன் தான் உலகம் என்று லிங்கேஷ் மீது காதலையும் அன்பையும் வைத்து இருக்கிறார் 

 

லிங்கேஷை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிலும் இருக்கிறார். 

 

இந்த சமயத்தில் இந்திய கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து

தமிழகத்திற்கு வரும் மாணவர்களுக்கு ஊரை சுற்றி காட்டவும், தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி சொல்லவும் லிங்கேஷை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார் மதுசூதனன்.

அப்படி வரும் லியாவும், லிங்கேஷும் நெருங்கி பழகிய ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். 

திவ்யாவும் லிங்கேஷம் சேர்ந்தார்களா? இல்லை லியாவும் லிங்கேஷம் சேர்ந்தார்களா? என்பதே என் காதலே படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஜெயலட்சுமி

தயாரிப்பு : ”ஸ்கை வாண்டர்ஸ்” எண்டர்டைன்மெண்ட் 

தயாரிப்பு : ஜெயலட்சுமி

இசை : சாண்டி சாண்டல்லோ

ஒளிப்பதிவு : டோனி சான், வெங்கடேஷ்

பாடல்வரிகள் : கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி

எடிட்டர் : கோபி கிருஷ்ணா, ரஞ்சித்

மக்கள் தொடர்பு : வேலு