எமோஜி விமர்சனம் 3/5

நாயகன் ஆதவ் (மகத் ராகவேந்திரா) பொறியியல் பட்டதாரி. கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஒரு ஸ்டோருக்குப் போகிறார். அங்கே யதார்த்தமாக சேல்ஸ் கேர்ளாக இருக்கும் நீச்சல் வீராங்கனை பிரார்த்தனாவை (மானசா சௌத்ரி) பார்த்து, மானசாவின் உடலமைப்பிலும், அழகிலும் (கிளாமர்) மயங்கி காதல் வயப்படுகிறார். காமம் கலந்த ரொமான்சில் ஈடுபட்ட இருவரும் சில நாட்களுக்குப் பிறகு பிரேக்அப் ஆகி இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். இருவரின் பிரிவால் மஹத் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதே போல், இவர்களின் எதிர் ப்ளாட்டில் தீக்ஷா (தேவிகா சதீஷ்) காதலனுடன் லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப் ஆகி பிரிகிறார்கள். அப்போது எதிர் ப்ளாட்டில் ப்ரேக் அப் ஆன தேவிகாவைச் நட்புடன் பழகி அவளுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறான். நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, திடீரென இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். இவர்கள் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வரக் காரணம் என்ன? அவர்கள் விவாகரத்து செய்தார்களா இல்லையா? என்பதே படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சவுத்ரி, வி.ஜே.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : ரமண ஆர்ட்ஸ்
இயக்கம் : சென் எஸ் ரங்கசாமி
இசை : சனத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு : ஜலந்தர் வாசன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்