ஆஷீர்வாத் சினிமாஸ், கோபுரம் பிலிம்ஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில், முரளி கோபி கதை மற்றும் திரைக்கதையில், மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், பிருத்விராஜ், அபிமன்யூ சிங், இந்திரஜித் சுகுமாரன், கார்த்திகேயா தேவ், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கும் படம் எம்புரான்.
லூசிஃபர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை ஆரம்பமாகிறது. அப்பாவின் பாதையில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார் டொவினோ தாமஸ்.
ரவுடியான அபிமன்யு சிங்கோடு சேர்ந்து கேரள வளங்களை அழிக்கக்கூடிய செயலில் ஈடுபடத் தயாராகிறார் டோவினோ தாமஸ்.
இவரின் இந்த செயல்களுக்கு அக்கா மஞ்சு வாரியர் மட்டுமல்லாமல், கேரள மக்கள், அக்கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவருமே கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.
ஆனால் டொவினோவோ எதையுமே கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சியோடு சேர்ந்து அபிமன்யூசிங் கொண்டுவரும் எல்லா முயற்சிகளையும் செயல்படுத்த தயாராகிறார்.
இந்த சூழ்நிலையில் தங்களுடைய நாட்டை விட்டுப் போன ஸ்டீபன் நெடும்பள்ளி திரும்பவும் வந்து நடக்கின்ற இந்த அராஜகத்திற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நிணைக்கின்றனர் கேரள மக்கள்.
ஸ்டீபன் நெடும்பள்ளியான அப்ராம் குரேஷி , லண்டனில் நிழல் உலக தாதாவாக வாழ்ந்து வருகிறார், சட்டத்திற்கு விரோதமான ஆயுதங்கள் பரிமாற்றத்தை தடுக்கும் அழிக்கும் நோக்கில் தன்னுடைய குழுவோடு ஒரு தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் அப்ராம் குரேஷி. கேரளாவையும் கேரள மக்களையும் காப்பாற்ற தன் குழுவோடு மீண்டும் கேரளா வருகிறாரா? இல்லையா? இவருக்கு பிரித்திவிராஜ் எவ்வாறு துணையாக இருக்கிறார்? என்பதே எம்புரான் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஆஷீர்வாத் சினிமாஸ், கோபுரம் பிலிம்ஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சிஜித் வாசுதேவ்
இசை : தீபக் தேவ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)