குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்., சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள “போர் தொழில்” திரைப்படத்தை, E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்சனுடன் சஸ்பெண்ஸ் நிறைந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது பிரீமியம் நாடகத் தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் உட்பட பன்மடங்கில் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு முன்னணி உள்ளடக்கம் மற்றும் ஐபி கிரியேஷன் ஸ்டுடியோ ஆகும். ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாக, மீடியா துறையில் மூத்த ஆளுமையான சமீர் நாயர் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த ஸ்டுடியோ, ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், மித்யா, கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளையும், உண்டேகி, பௌகால் போன்று விமர்சகர்களால் பராட்டப்பட்ட தொடர்களையும், பன் மொழிகளிலும் பிரபலமான தொடர்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளது. நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் ஷர்மா நடித்த அப்ளாஸ் திரைப்படமான ஸ்விகாடோ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. அபர்ணா சென் இயக்கிய தி ராபிஸ்ட் சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை வென்றது. தற்போது தயாரிப்பில், ஷர்மாஜி கி பேட்டி, ஜப் குலி கிதாப் மற்றும் பல சிறந்த படைபுகளை உள்ளடக்கிய திரையரங்க வெளியீட்டு படங்களும் மற்றும் நேரடியாக ஸ்ட்ரீமிங் திரைப்படங்களின் வகையிலும் வலுவான வரிசையினை கொண்டுள்ளது. அப்ளாஸ் அதன் ஆக்கப்பூர்வமான வெளியீட்டிற்காக Netflix, Disney+Hotstar, Amazon Prime Video, Sony LIV, MX Player, ZEE5 மற்றும் Voot Select போன்ற முன்னணி தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி (Eprius Studio LLP)
எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி. ஒரு ஸ்டார்ட்அப் புரொடக்ஷன் ஸ்டுடியோ. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளராக கடந்த ஆண்டுகளில் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான தொழில்முனைவோராக தன்னை நிரூபித்தவர் சந்தீப் மெஹ்ரா. அவரது தலைமையின் கீழ், இந்நிறுவனம் சிண்டிகேஷன் மற்றும் உள்ளடக்க மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. பலமொழிகளில் உள்ளடக்கத்தில் சிறந்த படைப்புகளுக்கு தயாரிப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், E4 என்டர்டெயின்மென்ட் போன்ற முக்கிய ஸ்டுடியோக்களுடன் இணைந்து சிறந்த படைப்புகளை உருவாக்கி வருகிறது.
E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி
E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி நிறுவனம் என்பது கடந்த 46 ஆண்டுகளாக தென்னிந்தியத் திரையுலகில் கோலோச்சும், முகேஷ் மேத்தா அவர்கள், திரை ஆளுமை சி.வி.சாரதியுடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஆகும். சி.வி.சாரதி இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் இயக்கி, ஃபஹத் பாசில் நடிப்பில் சாதனைகள் படைத்த நார்த் 24, காதம் போன்ற சிறந்த படங்களை தந்தவர், மேலும் சமீர் தாயார் இயக்கத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற, துல்கர் சல்மான் நடித்த NAPKCB, , பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸுடன் கோதா, மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கிய, பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த எஸ்ரா மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படங்களை தந்தவர்.