ஈமெயில் விமர்சனம்

எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், எஸ் ஆர் ராஜன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், அசோக் குமார், ராகினி திவேதி, ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இமெயில்.

நாயகன் அசோக்கும் நாயகி ராகினி திவேதி இரண்டு பேரும் எதிரே இருக்கும் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்கள். இரண்டு பேருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நாயகி ராகினி திவேதி ஒரு கேம் அடிக்ட்டாக இருக்கிறார். அவர் செல்போனுக்கு ஆன்லைன் கேம் ஒன்று புதிதாக வருகிறது. கேம் விளையாடினால் ஒரு லட்சம் பணம் கிடைக்கும் என்று வருகிறது. பணத்திற்காக ஆசைப்பட்டு அந்த கேமில் இணைகிறார் நாயகி.

அந்த ஆன்லைன் கேமின் மூலமாக நாயகி ராகினி திவேதிக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதற்காக கணவன் அசோக் இறங்குகிறார். ஆனால் அது அசோக்கின் உயிருக்கே ஆபத்தாக போய் முடிகிறது.

இதனால் இந்த பிரச்சனையை தானே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து களத்தில் இறங்கி போராடுகிறார் ராகினி திவேதி. அந்த பிரச்சனையை எப்படி சரி செய்தார்? அந்த பிரச்சனையின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? ஆன்லைன் விளையாட்டின் மூலமாக என்னவெல்லாம் பிரச்சனைகள் நடக்கிறது என்பதே ‘ஈமெயில்’ படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : எஸ்.ஆர்.ராஜன் இசை : கவாஸ்கர் அவினாஷ் & ஜுபின்
எடிட்டர் : ராஜேஷ் குமார்
கலை : கோபி ஆனந்த், கேஜிஎப் சியாம், மஞ்சு
பாடல்கள் : அன்புச் செழியன், விஷ்ணு ராம்
மக்கள் தொடர்பு : A.ஜான்