லெவன் விமர்சனம் 4/5

லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா, ரேயா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா, அர்ஜை, கிரீட்டி தாமராஜு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லெவன்.

நாயகன் நவீன் போலீஸ் அதிகாரியாக நேர்மையாக பணிபுரியும் அதிகாரியாக இருக்கிறார். அவரிடம் எந்த வழக்கு கொடுக்கப்பட்டாலும் அதனை சிறப்பாக கையாண்டு வழக்குகளை முடிக்கிறார். 

மர்மமான முறையில் சிலர் கொல்லப்பட்டு அவர்கள் உடல்கள் எரிக்கப்பட்டு கிடைக்கின்றன இந்த வழக்கை விசாரிக்க ஷாஷாங் என்ற போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் பொழுது அந்த ஷாஷாங்க்கு விபத்து ஏற்பட்டு கோமாக்கு சென்று விட அந்த வழக்கு நவீன் கையில் வருகிறது.

இந்த வழக்கை கையில் எடுத்துக் கொண்டு தீவிர விசாரணையில் இறங்குகிறார் நவீன். இவருக்கு துணையாக சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் இருக்கிறார். இந்த கொலைகளை செய்பவர் யார்? எதற்காக செய்கிறார்? அதற்கான பின்னணி என்ன? என்பதை யாரும் யூகிக்க முடியாத வகையில் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : லோகேஷ் அஜ்ல்ஸ்

இசை : டி.இம்மான்

கிரியேட்டிவ் தயாரிப்பு : பிரபு சாலமன்

இணை தயாரிப்பு : கோபாலகிருஷ்ணா.எம்

ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன்

எடிட்டிங் : ஸ்ரீகாந்த்.என்.பி

கலை : பி.எல். சுபேந்தர்

சண்டை  : பீனிக்ஸ் பிரபு

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்