ரீல் குட் பிலிம்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில், ஆதித்யா தயாரிப்பில், சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில், விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி, ராஜிவ் ஆனந்த், குலோத்துங்கன் உதய்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எலக்சன்”.
வேலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை
மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் எலக்சன் அந்த கிராமத்தில் மாநிலக் கட்சியின் தொண்டனாக 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார் ஜார்ஜ் மரியான். தன்னுடைய கட்சிக்கு விசுவாசமான தொண்டனாக இருந்து நடக்கின்ற தேர்தலில் எல்லாம் கட்சிக்காக வேலை செய்கிறார் அவருடைய மகனாக வருகிறார் விஜய்குமார்.
அரசியலில் இல்லாமல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் விஜயகுமார். சிறு வயதிலிருந்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் அது காதல் தோல்வியில் முடிய கஷ்டப்படுகிறார். பிறகு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார்.
இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வர மாமாவின் அறிவுறுத்தலின்படியும் தனது தந்தை அவமானப்பட்டதற்கு பதிலடியாக தேர்தல் இருக்கிறார் விஜய்குமார்.
தேர்தலில் நிற்கும் விஜய்குமார் பணத்தை அதிகமாக செலவு செய்கிறார் இருப்பினும் தேர்தலில் தோல்வியடைந்து விடுகிறார் இதனால் வீட்டில் ஒரு இழப்பும் ஏற்படுகிறது. பணத்தையும் இழந்து நிம்மதியை இழந்து தவிக்கிறார் விஜய்குமார்.
பிறகு என்ன செய்தார்? மீண்டும் தேர்தலில் நின்றாரா? ஜெயித்தாரா? இல்லையா? தனது தோல்விக்கு காரணமானவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே எலக்சன் படத்தோட மீதிக்கதை.
விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி, ராஜிவ் ஆனந்த், குலோத்துங்கன் உதய்குமார் என அனைவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : தமிழ்
வசனம் : அழகிய பெரியவன் – தமிழ் – விஜய்குமார்
ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜு
இசை : கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு : சிஎஸ் பிரேம் குமார் தயாரிப்பு : ஆதித்யா
வெளியீடு : சக்தி ஃபிலிம் ஃபேக்டரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்