தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

71வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் (ஓய்வு) அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து காவல் துறை மரியாதையை ஏற்றுக் கொண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் த.க.ராஜசேகர், உயர் அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.