CP கணேஷ் மற்றும் Timeline cinemas சார்பாக சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்க இயக்குனரகள் மணிரத்னம் மற்றும் AR முருகதாஸ் ஆகியவர்களிடம் கடல், கத்தி, ஒ காதல் கண்மணி படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்த சர்ஜுன் KM இயக்குனராக அறிமுகமாகும் படம் “எச்சரிக்கை”
த்ரில்லர் படமாக உருவாகும் எச்சரிக்கை படத்தில் சத்யராஜ், வரலஷ்மி சரத்குமார், விவேக் ராஜ்கோபால் (புதுமுகம்), மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீநிவாசன், கலை இயக்குனர் விஜய் ஆதிநாதன், படத்தொகுப்பாளர் கார்த்திக் ஜோகேஷ், இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி KS.
எச்சரிக்கை படத்தின் கதை பணம், பேராசை மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக கொண்டதாக இருக்கும். இதில் இரு இணை கதைகள் ஒரு கட்டத்தை நோக்கியே நகரும். அதில் ஒன்று ஒரு குற்றத்தை பற்றியும், மற்றொன்று அதை புரிந்தவர்களை தேடுபவரை பற்றியும் இருக்கும். இந்த கதாபாத்திரங்களின் பின்கதையே இவர்களை கதையில் வழிநடத்தி செல்வது இப்படத்தின் ஒரு சிறப்பம்சமாகும். இக்கதையில், யாரையுமே நம்மால் கருப்பு, வெள்ளை என்று பாகுபடுத்திவிட முடியாதபடி, அவர்கள் ஒரு கலவையாகவே இருப்பதே ஓர் சிறப்பம்சமாகும்.
கடந்த 20-ஆம் தேதி முதல் சென்னையிலிருக்கும் Malls, தியேட்டர்களில் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்னும் வாசகம் காணப்பட்டது. இது திருடர்கள் இருந்து கவனமாக இருக்க அரசு வெளியிட்டுள்ள வாசகமா? இல்லை அரசியல் பிரச்சாராமா? என்று யோசித்து கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் முதல் பார்வையை பெரும் இயக்குனர்களான திரு. மணி ரத்னம், திரு. பாலா, திரு. AR முருகதாஸ் வெளியிட்டுள்ளனர்.
எச்சரிக்கை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்த நேரத்திலிருந்தே இணைய தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் Teaser-ஐ மே மாதம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.