கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மம்தாபைஜு, சரத்குமார், ரோகிணி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ட்யூட்.
பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கிறது என்றதும் அந்த திருமணத்திற்கு சென்று பிரச்சனை ஏற்பட அங்கிருந்து காவல் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு பிரதீப் ரங்கநாதனை அழைத்துச் செல்கிறார்கள்.
அவரை காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதற்காக மாமா பெண்ணான மமிதாபைஜு அங்கு வருகிறார்.
பிரதீப் ரங்கநாதனின் மாமாவாகவும் பால்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் சரத்குமார்.
பிரதீப் ரங்கநாதன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்கின்ற ஒரு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் நடத்தி வருகிறார்.
பிரதீப் ரங்கநாதனும் மமிதாவும் சிறுவயதிலிருந்தே நட்புடன் இருந்து வருகிறார்கள். மமிதா பைஜிற்கு பிரதீப் மீது காதல் ஏற்பட அந்த காதலை பிரதிபிடம் சொல்கிறார் மமீதா.
ஆனால் பிரதிபோ எனக்கு உன் மீது காதல் இல்லை நான் உன்னை நட்பாக தான் பார்த்தேன் என்று காதலை நிராகரித்து விடுகிறார்.
இதனால் மனம் உடைந்த மமீதா பிரதிபீடம் இருந்து விலகி இருப்பதற்காக வெளிநாடு சென்று விடுகிறார்.
மமீதாவின் பிரிவு பிரதீப்பிற்கு அவருடைய காதலை உணர்த்துகிறது. அதனை தன்னுடைய மாமா சரத்குமாரிடம் சொல்ல, சரத்குமார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
திருமண ஏற்பாடுகள் விமர்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்க மமிதா வெளிநாட்டிலிருந்து வருகிறார். அப்பொழுது பிரதிபிடம் மமீதா நான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தன் கல்லூரி நண்பரான ஹரிது ஹாரோனை காதல் செய்கிறேன் என்று சொல்கிறார்.
இந்த காதல் விஷயம் தெரிந்த பிறகு பிரதீப் என்ன செய்தார்? பிரதீப்பும் மமீதாவும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? மமிதாவையும் அவருடைய காதலையும் பிரதீப் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதே டியூட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : கீர்த்தீஸ்வரன்
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர்
இசை : சாய் அபியங்கர்,
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : லதா நாயுடு
எடிட்டிங் : பரத் விக்ரமன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் எ நாசர்

