இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக என்ற பெயரை எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பாண்மை உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரட்டை இலை கிடைத்ததால் அதிமுக கட்சி, கொடி எல்லாமே எடப்பாடிக்கு அணிக்கு சொந்தமாகும். அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.