டொனால்ட் டிரம்ப்பின் மகள் இந்தியா வருகை

நவம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வர உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளின் தலைவராக இவர் இதில் பங்கேற்கிறார். 

இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” உலகளவில் இருக்கும் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இவாங்கா தலைமை தங்குவார்” என தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் தொழில்முனைவோர் மாநாட்டில் இவாங்காவை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

டிரம்ப்பின் மகளான இவாங்கா அவரது ஆலோசகராகவும் அமெரிக்க அரசில் பணிபுரிந்து வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு இவாங்கா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். வரும் நவம்பர் 28 –  30ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடானது நடைபெற உள்ளது. இந்தியா – அமெரிக்கா அரசுகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்த உள்ளன.