ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக நடந்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தார். பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக அரசு ஆய்வு செய்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் என நீதிமன்றத்தில் கூறியது.
அறிக்கை தாக்கல் செய்த பிறகு 13 நாட்களுக்குள் இதற்கான முடிவு எடுக்கப்படவேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் நடந்த விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய கூடாது எனவும், அவர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.