சுப்ரீம் கோர்ட் டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் நவம்பர் 1 ஆம் தேதி வரை பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து பட்டாசு வணிகர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்து தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், பட்டாசு விற்பதற்கான தடை தொடரும். பட்டாசுகளை ஏற்கனவே வாங்கியவர்கள் இப்போது வெடிக்கலாம். காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவுக்கு சிலர் மதச்சாயம் பூச முயற்சிப்பது வலியையும், வேதவையையும் தருகிறது.
அரசியல்வாதிகளும், மற்றவர்களும் இந்த தடை இந்துக்களுக்கு எதிரானது என கூறி உள்ளனர். இத்தகைய விமர்சனங்கள் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த தடை இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் தான். அதுவும் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியை கொண்டாடினால் அது காற்று மாசுபாட்டு அளவை எந்த அளவிற்கு குறைக்கும் என்பதை அறிவதற்காக மட்டுமே. அதனால் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கவோ, மத சாயம் பூசவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது.