டி என் ஏ விமர்சனம் 4/5

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா விஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், ரித்விகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டி என் ஏ.

காதலில் தோல்வியடைந்து குடிபோதையில் மூழ்கி தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. வீட்டில் யாரையும் மதிப்பதில்லை தம்பியை மாப்பிள்ளை பார்க்க வந்தவர்களின் எதிரில் குடித்துவிட்டு தகராறு செய்கிறார். அதர்வாவின் அப்பாவான சேத்தன் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா என்று சாபம் விடுகிறார்.

இந்த போதைப் பழக்கத்திலிருந்து அதர்வாவை மீட்க அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள். 

அதர்வாவின் வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்க மறுபுறம், நிமிஷா விஜயன் பார்டர் லைன் பர்சனல் டிஸ்ஆர்டர் என்ற ஒரு குறைப்பாடால் அவருக்கு வரும் வரன்கள் எல்லாம் தட்டி போகிறது.

இப்படி இருக்கும் நிமிஷா விஜயனை, அதர்வாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் அதர்வாவின் குடும்பத்தினர்.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிமிஷா விஜயனுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் குழந்தையை நிமிஷாவிடம் இதுதான் உங்கள் குழந்தை என்று காண்பிக்கிறார் மருத்துவர் ரித்விகா. 

பிறந்த குழந்தையை சில நிமிடங்களுக்கு மட்டுமே அரவணைத்துவிட்டு மீண்டும் மருத்துவரிடம் கொடுத்து விடுகிறார் நிமிஷா.

அனைவரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தையை இன்குபேட்டரில் வைப்பதற்காக எடுத்து செல்கிறார்கள். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் குழந்தை எடுத்து வந்து நிமிஷாவிடம் கொடுக்கிறார்கள்.

குழந்தையை கையில் வாங்கியதும் இது என்னுடைய குழந்தை இல்லை, நம்முடைய குழந்தை எங்கே என்று கேட்கிறார் நிமிஷா.

BPD குறைபாடு இருப்பதால், இப்படித்தான் கத்துவார்கள் அந்த மருத்துவமனையின் மருத்துவர் சொல்லி விடுகிறார். இதனால் அவர்களின் குடும்பமும் அதை நம்புகிறது ஆனால் அதர்வாவுக்கு சந்தேகம் எழுகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தையோடு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் இருவரும். 

அந்தக் குழந்தைக்கு டி என் ஏ எடுத்துப் பார்க்கிறார் அதர்வா. தங்கள் குழந்தை இல்லை என்று அதர்வாவுக்கு தெரிய வருகிறது. 

இந்த உண்மை தெரிந்த பிறகு அவர்களின் குழந்தையை அதர்வா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே டி என் ஏ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சஹி சிவா, ப்ரவீன்

பின்னணி இசை : ஜிப்ரான்

ஒளிப்பதிவு : பார்த்திபன்

தயாரிப்பு : ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, யுவராஜ்