திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை திடீரென, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டைப்பகுதியில் உள்ள குழாயை மாற்றுவதற்காகவே அவரை அனுமதித்ததாகவும், இன்றே அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே அவரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.