அரசியல் மேடையாக, நீதிமன்றத்தை மாற்ற முயற்சிக்கிறது திமுக – நீதிபதி கண்டனம்

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், போலீஸ் உத்தரவை மீறி எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட சென்றதால் கைது செய்யப்பட்டார். இதனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், நீட் விலக்கு தொடர்பான போராட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுக சார்பில் தவறான தகவல் கூறப்பட்டதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து நீதிபதி ரமேஷ் கூறுகையில், “நீதிமன்றத்தை திமுக அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்கிறது. விசாரணையின் போது திமுக முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறியுள்ளது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், கைது செய்யப்பட்ட அன்றே ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.