இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில்  “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது

இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில்  “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஷ்வின் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அன்பறிவு’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜனவரி 7, 2022 அன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் இத்திரைப்படம்  பொழுதுபோக்கு அம்சங்கள்,  குடும்பத்தின் மதிப்புகள் மற்றும் நல்ல பொழுதுபோக்குடன் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் அஷ்வின் ராம் கூறும்போது,
‘குடும்ப பொழுதுபோக்கு’ வகை படங்கள்  குடும்பங்களை  ஒன்றிணைக்கும் திருவிழாவாக இருக்குமன்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். இந்த வெற்றி திரையரங்குகளில் பலமுறை நிருபணமான ஒன்று, இருப்பினும், OTT இயங்குதளத்திலும் அதே அளவிலான வரவேற்பையும், வெற்றியையும் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திரைக்கதையை நம்பி அதை தயாரித்ததற்காக,  எனது தயாரிப்பாளர்களான TG தியாகராஜன் சார், அர்ஜுன் தியாகராஜன் சார் மற்றும் செந்தில் தியாகராஜன் சார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல பிராந்தியங்களில் பரந்துபட்ட  ஸ்ட்ரீமிங் மூலம் இந்தத் திரைப்படத்தை, ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்றதற்காக நான் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். ஹிப் ஹாப் ஆதி, நெப்போலியன் சார், சாய் குமார் சார், ஆஷா ஷரத் மேடம் மற்றும் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்து வெற்றி பெறச் செய்ததற்காக நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் TG தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் கூறும்போது,
“ஒரு தயாரிப்பாளராக, நான் இரண்டு காரணங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்,

முதலாவது இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி, அடுத்தது சத்யஜோதி நிறுவனம் புதிய பரிமாணமத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்திருப்பது. பல ஆண்டுகளாக, எங்கள் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்  என பல வகைகளிலும்  தயாரிப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் எங்களின் முதல் நேரடி OTT வெளியீடு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் மிடாஸ்-டச்க்கு நன்றி. எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு அழகான படத்தையும், பெரிய வெற்றியையும் பரிசாக வழங்கிய அன்பறிவு படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய திறமையாளர்கள் பலரை வளர்த்தெடுத்துள்ளது, குறிப்பாக மணிரத்னம், கதிர், கரு பழனியப்பன், திருமுருகன், கண்ணன் மற்றும் எண்ணற்ற அறிமுக இயக்குநர்களை உருவாக்கியுள்ளது என்பது கூடுதல் பெருமைக்குரியது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த அன்பறிவு படத்தின் மூலம் இயக்குனர் அஸ்வின் ராம் தனது இயக்குனராகப் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அஸ்வின் ராம் அவர்களும் இந்த வரிசையில் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.