பரியேறும் பெருமாள் படத்தின் எடிட்டர் செல்வா “டம்பல் ” என்னும் துணிக்கடையை சமீபத்தில் சென்னை வேளச்சேரி கிராண்ட் மாலில் துவங்கினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர், இயக்குனர் பா.இரஞ்சித் துணிக்கடையை திறந்து வைத்தார்.
சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நடிகர் கதிர், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் , இயக்குனர் கண்ணன், சுராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சினிமா எடிட்டராக இருந்துகொண்டு துணிக்கடை வியாபாரத்திலும் கால்பதித்திருக்கும் எடிட்டர் செல்வாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.