சசிகலா காலில் விழுந்தது பற்றி திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

தமிழக வளத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில் விழுந்தவர் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயளாலர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்து கடலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில் மரியாதை நிமித்தமாகவே விழுந்ததாகவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் மற்றும் செங்கோட்டையனும் பதவி கிடைத்தபோது சசிகலா காலில் விழுந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.