தினகரனின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Sugar & Spice, Knack Art Productions, Major Gowtham Directorial, "Kannula Kaasa Kaatappa"
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தினகரன் கடந்த மாதம் 29ஆம் தேதிக்குள் இது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தது. தினகரன் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திடம கால அவகாசம் கேட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காமல் நிராகரித்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற கிளையும் அவகாசம் கொடுக்காததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார்.

மாலை 4 மணி அளவில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த இருந்தது.  இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தினகரன் அளித்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை நடத்தலாம் எனவும் நவம்பர் 10ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.